அஞ்செலா மெர்க்கலின் கட்சிக்கு அடுத்த தலைவராக, ஆர்மின் லஷெட்!

உலகின் மிகவும் அதிகாரமுள்ள பெண்மணியாகவும், ஜெர்மனியின் பிரதமராகவும் இருக்கும் அஞ்செலா மெர்க்கலின் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் அடுத்த தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார் இன்னுமொரு மாதத்தில் தனது 60 வது வயதைக் கொண்டாடப்போகும் ஆர்மின் லஷெட்.

“நாங்கள் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றவேண்டுமானால் அரசியலில் நடுவழியில் பயணம் செய்யவேண்ம்,” என்று தொடர்ந்தும் அஞ்செலாவின் வழியையே பின்பற்றப்போவதாகக் குறிப்பிட்டிருக்கிறார் லஷெட். தற்போது ஜேர்மனியின் மிக அதிகக் குடிமக்களைக் கொண்ட மாநிலமான North Rhine-Westphalia இல் முதலமைச்சராக இருக்கிறார் லஷெட்.

கட்சியின் அடிப்படைவாதிகளின் வேட்பாளரான பிரடெரிக் மெர்ஸுடன் போட்டியிட்டு 521- 466 என்ற் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார் லஷெட்.

About the author

Leave a Reply