2018 இல் வியட்நாம் பிரதமர், 2019 இல் தென்னாபிரிக்க ஜனாதிபதி, 2020 இல் பிரேசில் ஜனாதிபதி ஆகியோரைத் தனது நாட்டின் குடியரசு தினமான பெப்ரவரி 26 க்குத் தலைமைதாங்க வைத்திருந்தது இந்தியா. 2021 க்குப் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தவர் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன்.
பிரிட்டனில் அதிவேகமாகப் பரவிவரும் திரிபடைந்த கொரோனாக் கிருமியின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நாடெங்கும் கடும் கட்டுப்பாடுகளைத் திங்களன்று இரவு தனது நேரடிப் பேச்சில் அறிவித்த போரிஸ் ஜோன்சன் செவ்வாயன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்பு கொண்டு பேசினார். பெப்ரவரியில் முடியாவிட்டாலும் கூட இந்த வருடத்தின் முதல் பாகத்தில் தான் இந்தியாவுக்கு விஜயம் செய்ய ஆரவமாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்
