பதவியேற்க முன்னரே கொவிட் 19 ஆல் உயிரிழந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்.

டிசம்பர் 5 ம் திகதியன்று நடந்த அமெரிக்க பாராளுமன்றத் தேர்தலில் லுயீசியானாவில் வெற்றிபெற்ற லூக் லெட்லோ ஜனவரி 03 ஞாயிறன்று பதவியேற்க இருந்தார். இரண்டு பிள்ளைகளின் தந்தை இவர்.

கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட சுமார் 50 அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்களில் இளையவரான லூக் 41 வயதானவர். டிசம்பர் 19 ம் திகதியன்று தான் தொற்றுக்கு ஆளாகியதாக அறிவித்த லூக், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவந்தார். 

ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த லூக் முதல் முறையாகத் தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர்.

சாள்ஸ் ஜெ. போமன்

About the author

Leave a Reply