ஹாட்லி,மெதடிஸ்த பெண்கள், மானிப்பாய் மகளிர், அதிபர் பதவி வெற்றிடம் – கோரப்படும் விண்ணப்பங்கள்

யாழ் மாவட்ட 1 AB தர பாடசாலைகளில் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி,மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கான அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் கோரப்படுகின்றன.

குறித்த பதவிக்கு விண்ணப்பிப்பவர் வடமாகாணத்தில் தற்சமயம் பணியாற்றுவதோடு இலங்கை அதிபர் தர வகுப்பு 1 மற்றும் வகுப்பு 2 நிலைகளில் உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண கல்விச்செயலாளரின் தீர்மானமே இறுதியானது என்று குறிப்பிடப்படும் இந்த விணப்பம் கோரல்,இந்த அதிபர் பதவிகளானது வரும் 2021 ஜனவரி மாதம் 1 ம் திகதியிலிருந்து வெற்றிடமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

About the author

Leave a Reply