முல்லைத்தீவு மாவட்ட சுகாதார பணிப்பாளராக வைத்தியர் உமாசங்கர்

முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரப் பணிப்பாளராக வைத்தியர் கலாநிதி முத்துக்குமாரசாவாமி உமாசங்கர் அவர்கள் பதவியேற்றுக்கொண்டார்.

வடமாகாண சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு.கேதீஸ்வரன் அவர்கள் வழங்கிய நியமனத்தின் அடிப்படையில் இந்த பதவியை டொக்டர் உமாசங்கர் அவர்கள் பதவியேற்றிருந்தார்.

வைத்திய கலாநிதி திரு மு.உமாசங்கர் அவர்கள் இதற்கு முன்னதாக யாழ் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு போன்ற இடங்களில் தன் பணி செய்திருந்தார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சொந்த இடமாகக்கொண்ட வைத்தியர் உமாசங்கர் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வியை ஹாட்லிக்கல்லூரியில் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About the author

Leave a Reply