தனது முகக்கவசத்தை மறந்துபோய்விட்ட அஞ்செலா மெர்க்கலின் படம் சமூக வலைத்தளங்களில் உலவுகிறது.

ஜெர்மனியின் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருப்பதுடன் நாட்டு மக்களை நாட்டுக்குள் வேகமாகப் பரவிவரும் வெவ்வேறு திரிபடைந்த கொரோனாக் கிருமிகள் பற்றி எச்சரித்து வருபவர் அஞ்செலா மெர்க்கல். எப்போதும் தனது முகக் கவசத்துடனேயே பொது மேடைகளில் பேசிவருவதுடன் பொதுமக்களும் முகக்கவசத்தை மறக்காமல் அணியவேண்டுமென்று எச்சரிப்பவர் அவர்.

ஆனால், பொது மேடையொன்றில் மறந்து போய் முகக்கவசமில்லாமல் அவர் பாராளுமன்றத்தில் பேசிக்கொண்டிருந்த படமொன்று வெளியாகியிருக்கிறது. அதில் பேச்சின் இடையில் திடீரென்று தனது தவறை ஞாபகம் கொள்கிறார். களேபரத்துடன் முகத்தில் பெரும் விசனத்துடன் அதைத் தேடி எடுத்து அணிந்துகொள்வதை அப்படம் தெளிவாகக் காட்டுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

About the author

Leave a Reply