ஜோ பைடன் பகிரங்கமாகத் தடுப்பூசி!

அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன் தொலைக்காட்சிக் கமெராக்களுக்கு முன்பாகப் பகிரங்கமாக வைரஸ் தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளார்.

78 வயதான பைடனும் அமெரிக்காவின் அடுத்த முதல் பெண்ணான அவரது துணைவியாரும் Delaware இல் உள்ள மருத்துவமனை ஒன்றில் தங்களுக்கான முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பைசர் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை அமெரிக்கர்களுக்கு எடுத்துக் காட்டுவதற்காகவே பகிரங்கமாக அதனை ஏற்றிக்கொள்வதாக ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் மற்றும் அவரது கணவர் ஆகியோர் அடுத்தவாரம் தடுப்பூசி ஏற்றிக்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்

About the author

Leave a Reply