வடக்கின் திறந்த மட்ட செஸ் போட்டி- முதலிடம் வென்ற யாழ் இந்து மாணவன் ரிசிகரன்

தேசியமட்டத்தில் இணைய வழி செஸ் போட்டியில் திறந்த மட்ட போட்டியில் வடக்கின் வெற்றியாளராக, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் ரிசிகரன் சிவாஸ்கரன் சாதனை படைத்துள்ளார்.

இவரின் வெற்றி யாழ் இந்துக்கல்லூரிக்கு தங்கப்பக்கத்தை கொண்டுவந்திருக்கும் அதேவேளை வடக்கிலிருந்து தேசியமட்டத்திற்கு, முதல்தர செஸ் விளையாட்டு வீரராக உள்நுழையும் வாய்ப்பு ரிசிகரனுக்கு கிட்டியுள்ளது.இறுதிப்போட்டியில் ஜானுஷனுடன் சமன் செய்த ரிஷிகரன் முன்னைய ஏழு போட்டிகளில் வெற்றியை பதிவு செய்து புள்ளிகள் அடிப்படையில் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் யாழ் இந்துக்கல்லூரியின் அட்சயன் செந்தில்நாதன் மற்றும் சஞ்சீவ் ஆகியோரும் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை வென்றிருக்கிறார்கள்.

இவர்களுடன் வடக்கிலிருந்து முதல்தர 29 போட்டியாளர்களும் தெற்கிலிருந்து முதல்தர 17 போட்டியாளர்களும் புள்ளிகள் அடிப்படையில் தெரிவாகி தேசியமட்ட போட்டிகளில் இந்தமாதம் பங்குபற்ற உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About the author

Leave a Reply