க பொத உயர்தரப் பரீட்சையில் , கணிதப் பிரிவில் சரசாலை ஊரைச்சேர்ந்த மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை நிலைநாட்டியுள்ளார்
கணித பிரிவில் புதிய பாடத் திட்டத்திற்கமைய பரீட்சையில் தோற்றிய குறித்த மாணவன் சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கும் பெருமையை ஏற்படுத்தி தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியிருந்த நிலையில் இந்த சாதனை பதிவாகியுள்ளது.
பல்வேறு போட்டிகளிலும் முதல் நிலையை படிக்கும் காலங்களிலேயே நிலைநாட்டிய மாணவன் தனராஜ் சுந்தர்பவன், சர்வதேச ரீதியில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியிலும் வெற்றிபெற்று புலமைப்பரிசில் பெற்று சாதனையை பதிவுசெய்தவராவார்.

