தமிழர் பலம் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடட்டும் – யாழ் பல்கலை ஒன்றியம் அழைப்பு

தமிழர்களின் ஐக்கியத்தையும் நீதிக்கான வேட்கையையும் ஒரே குரலாக வெளிப்படுத்த தமிழர்கள் அனைவரும் முள்ளிவாய்க்காலில்  வரும் மேமாதம் 18ம் திகதி ஒன்று கூட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முள்ளிவாய்க்கால்    மண்ணிலிருந்து அந்த நீதிக்கான அழைப்பை விடுத்திருக்கிறது.

நவீன யுகத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய மனித அவலம்,  அதன் உச்சக்கட்டமாக நடத்தி முடிக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இனவழிப்பு செய்யப்பட்ட எம் இன மக்களை நினைவு கொள்ள வேண்டிய அவசியத்தை ஒன்றியம் எடுத்துக்கூறியுள்ளது.அதுமட்டுமல்லாமல் ஈழத்தமிழினம் எதிர்கொண்ட அனைத்து இனவழிப்பு நடவடிக்கைகளில் உயிர் நீத்த மக்களை நினைவுககொள்ள வேண்டிய நாளாக – தமிழர் இனவழிப்பு நினைவு நாளாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.அரசியல் தலையீடுகளற்று அரசியல் பேதங்கள் மறந்து எல்லா மக்களும் ஒன்று சேர நினைவு கூர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது

About the author

Leave a Reply