பிரான்ஸில் பிரஜாவுரிமை கோரியிருக்கும் பிரிட்டிஷ் பிரதமரின் தந்தை.

தான் பிரெஞ்சுப் பிரஜையாவதற்கான விண்ணப்பங்களை அனுப்பிவிட்டு அவைகளின் முடிவுக்காகக் காத்திருப்பதாக போரிஸ் ஜோன்சனின் தந்தை ஸ்டான்லி ஜோன்சன் தெரிவித்திருக்கிறார். 

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனக்கிருக்கும் தொடர்புகளை இழந்து போகாமலிருக்கத் தான் பிரான்ஸின் பிரஜாவுரிமை கோரியிருப்பதாக ஸ்டான்லி ஜோன்சன் தெரிவித்திருக்கிறார். இவர் ஐரோப்பிய் ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர், 2016 ல் நடந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரியலாமா என்ற கருத்துத் தேர்தலில் பிரியக்கூடாதென்று வாக்களித்தவர்.

“எனக்குத் தெரிந்தவரை நான் ஒரு பிரெஞ்சுக்காரன். எனது தாயார் பிரான்ஸைச் சேர்ந்தவர். அவரது தாயாரோ முழுக்க முழுக்க ஒரு பிரெஞ்சுக்காரர், அதுபோலவே அவராது பாட்டனாரும். எனவே நான் எனது வேர்களைத் திரும்பவும் பெற்றுக்கொள்கிறேன்,” என்கிறார் ஸ்டான்லி ஜோன்சன். 

சாள்ஸ் ஜெ. போமன்

About the author

Leave a Reply