சாதனையில் பெலேயைத் தாண்டிய லியனெல் மெஸ்ஸி.

தனது பர்ஸலோனா உதைபந்தாட்டக் குழுவுக்காக 644 வது கோலை வல்லடோலிட் (Valladolid) குழுவுக்கெதிராகப் போட்டதன் மூலம் லியனெல் மெஸ்ஸி சர்வதேச விளையாட்டு வீரர் ஒரே குழுவுக்காக விளையாடிப் போட்ட கோல்களின் எண்ணியில் பெலேயின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

“நான் உதைபந்தாட்டம் விளையாட ஆரம்பித்தபோது எந்த ஒரு சாதனையும் போடுவேனென்று கனவு கண்டதில்லை, நிச்சயமாக நான் இன்று செய்த இந்தச் சாதனையை. எனக்கு இத்தனை வருடம் உதவிசெய்தவர்கள் எல்லோருக்கும் இதற்காக நன்றி செலுத்துகிறேன்,” என்று தனது சமூகவலைத்தளச் செய்தியில் மெஸ்ஸி நன்றி செலுத்துகிறார்.

ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த மெஸ்ஸி தனது 13 வயதிலேயே பர்ஸலோனாக் குழுவில் சேர்ந்து அதில் மட்டுமே விளையாடி வருகிறார் என்பது ஒரு தனிச் சாதனை, பிரேசிலைச் சேர்ந்த பெலே தனது நாட்டின் ஸந்தோஸ் குழுவிற்காக விளையாடி அவர்களுக்காக அதிக கோல்கள் போட்டவர் என்ற சாதனையை 22\12\2020 வரை வைத்திருந்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

About the author

Leave a Reply