“இதே பொலீஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட ஆசைப்படுகிறேன்,” என்று இணையத்தில் எழுதிய கைதி.

சந்தோஷ் சிங் என்ற பொலீஸ் அதிகாரி டுவீட்டிய ஒரு பதிவு பலரையும் கவர்ந்து சிரிப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. மும்பாயின் மீரா – பயந்தாரிலிருக்கும் நய நகர் பொலீஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட மன்ஸூரி அவேஷ் என்ற நபர் கூகுள் கருத்துப் பதிவேட்டில் (Google Review) எழுதியிருந்த வரிகளே அதற்குக் காரணமாகும்.

அந்த நகரைப் பற்றிய பதிவேட்டில் “இங்கே கைதுசெய்யப்பட்டேன். என்னை நன்றாக நடத்தினார்கள். கைது செய்து அடைக்கப்பட்டிருந்த அறைகளும் வசதியானவை. அங்கே வேலை செய்பவர்களும் அன்பானவர்கள். மீண்டும் கைதுசெய்யப்படும்போது கட்டாயமான இங்கேயே கைதுசெய்யப்பட விரும்புகிறேன்,” என்று எழுதியிருந்தார் அங்கே அடைக்கப்பட்டிருந்த கிளி.

அதைப் படமெடுத்துப் பரவவிட்ட பொலீஸ் அதிகாரி “மீண்டும் கைதுசெய்யப்பட ஆசைகொண்டிருக்க, பொலீஸ் நிலையங்கள் நல்ல இடங்களல்ல. இதையும் மதிப்பீடு செய்கிறாயா?” என்று பதிலளித்திருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

About the author

Leave a Reply