58 நிமிடங்களில் 46 உணவுப்பண்டங்களைச் சமைத்துத் தமிழ்நாட்டு சிறுமி சாதனை படைத்தார்.

தாயாரிடமிருந்து சமையல் கலையைக் கற்றுக்கொண்டதாகச் சொல்லும் லக்ஷ்மி சாய் கொரோனாத் தொற்றைத் தடுக்க நாடெங்கும் வீடுகளுக்குள் முடங்கியிருந்த காலத்தில் தன்னை இதற்காகத் தயார்செய்துகொண்டாள். இந்தச் சிறுமியின் சாதனை “Unico Book of World Records” இல் பதியப்பட்டிருக்கிறது.

கேரளாவைச் சேர்ந்த பத்துவயதுச் சிறுமியொருத்தி 30 உணவுப்பண்டங்களைச் சமைத்துச் சாதனை செய்ததைக் கண்டு லக்ஷ்மிக்கு இந்த ஆர்வம் வந்திருக்கிறது. மகளின் ஆர்வத்தைக் கண்ட தந்தை “நீ இவ்விடயத்தில் உலக சாதனை செய்ய உழைக்கலாமே,” என்று ஊக்குவித்திருக்கிறார். எனவே பாரம்பரியச் சமையல்களைச் சமைத்துவரும் தாயின் அருகிலிருந்து பார்த்து, உதவித் தனது வெற்றிக்காக உழைத்திருக்கிறாள்.

சாள்ஸ் ஜெ. போமன்

About the author

Leave a Reply