“வரவிருக்கும் தேர்தலில் நான் கட்டாயம் பங்குபற்றுவேன்,” என்று அறிவித்ததன் மூலம் 2014 இல் தி.முக-வை விட்டு வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி தமிழ்நாட்டில் ‘ரஜனியின் அரசியல் பிரவேச அழைப்பு’க்குப் பின்னர் புதிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
“2021 தேர்தலில் உங்கள் பங்கு என்ன?” என்று விபரமாகக் கேட்ட நிருபர்களுக்கு “நான் தனிக் கட்சி தொடங்கக்கூடும், எவருடனாவது கூட்டு வைத்துக்கொள்ளக்கூடும் அல்லது தேர்தலில் வாக்களிக்கக்கூடும். இவைகளெல்லாமே பங்கெடுக்கும் விதங்கள்,” என்று சூசகமாகப் பதிலளித்திருக்கிறார்.
ரஜனிகாந்த் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கும் கட்சியில் அழகிரி சேரக்கூடுமா, கூட்டுவைத்துக்கொள்ளக்கூடுமா என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.தனிக் கட்சி ஆரம்பிப்பது பற்றித் தனது ஆதரவாளர்களுடன் பேசி முடிவெடுக்க இருப்பதாகக் கூறினார் மு.க.அழகிரி.
