யாழ் இந்துக்கல்லூரியில் புதிதாக அமையவிருக்கும் கழகமனை (Club House)

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் புதிதாக ஒரு கழகமனை (Club House) அமைப்பதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த கழகமனை அமைப்பதற்காக ஆரம்ப அடிக்கல் நாட்டும் விழா யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் 24ம் திகதி ஒகஸ்ட் மாதம் திங்கட்கிழமை அன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்லூரி அதிபர் திரு செந்தில்மாறன் தலைமையேற்றிருந்தார்.

கல்லூரி சம்பிரதாய முறையாகிய இறைவழிபாட்டுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.இந்த நிகழ்வில் ஐக்கிய ராச்சிய பழையமாணவர் சங்கத்தின் சார்பில் அதன் முன்னாள் தலைவர் திரு செவ்வேள் மற்றும் ஹரிகரன் ஆகியோர் பாடசாலை சமூகத்தினருடன் இணைந்து கலந்து கொண்டிருந்தனர்.

இதில் முக்கியமாக இந்தகல்லூரியின் இளம் பழைய மாணவர்களில் ஒருவரான கட்டட பொறியியலாளர் திரு.அலோசியஸ் ஒஸ்ரின் அவர்கள் மிகத்திறம்பட அனைத்து வசதிகளும் உள்ளடங்கலாக வடிவமைத்துள்ளார் என்று குறிப்பிடப்படுகிறது.

இது ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் சங்கத்தினரின் “திடல்” செயற்திட்ட இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கபடுவதோடு, மொத்தமாக 12 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் செயற்படுத்தப்படவுள்ளது. இதன் மொத்த நிதியையும் ஐக்கிய ராச்சிய கிளையின் ஆயுட்கால உறுப்பினர்கள் பங்களித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

About the author

Leave a Reply