இங்கிலாந்தில் நகரங்களில் அமைந்துள்ள சில பாடசாலைகளில் அங்கு கல்வி கற்கும் சிறுவர்களுக்கு காடுகள் பற்றிய ஒரு மேலோட்டமான விவரணத்தை அறிய வைப்பதற்காக காடு மாதிரி அமைக்கப்பட்டிருப்பதும் வழமையாகும்.அதன் அடிப்படையில் இங்கிலாந்தில் ஒல்ட்பெரியில் பேர்மிங்கம் பாலாஜி ஆலயத்திற்கு அருகில் அமைந்திருக்கும் பாடசாலையில் அமைக்கப்பட்டிருக்கும் மாதிரி காடு அமைப்பு (Model Forest) முக்கியமானதாகும்.
பொதுவாக சிறுவர்களுக்கு இப்படியான இயற்கை அம்சங்களுக்கு போவது மிக விருப்பமான செயலாகும்.அதுவும் கோடை காலத்தில் அடிக்கடி இவற்றுக்கு போவார்கள். அங்கு தாங்களாகவே விளையாட்டுக்களை விளையாடுவதும் வழமை. பொதுவாக ஊஞ்சல் சமையல் ஓடி விளையாடுதல் என்று தங்களை என்றும் மகிழ்ச்சிப்படுத்திய வண்ணமே இங்கே இருப்பார்கள்.
மிகச்சிறப்பான ஒரு வெற்றிநடையின் சுற்றுலாவாக ஒல்ட்பேறி காடு மாதிரி (OLDBERY MODEL FOREST)இடத்திற்கு பயணம் செய்து பலரும் பார்வையிட இங்கே பதிவாக தருகிறது வெற்றிநடை. நீங்களும் பார்த்து சிறுவர்களுக்கு காண்பித்து காட்டின் அம்சகளை சிறுவர்களுடன் உரையாடி மகிழ்ச்சியாக இருங்கள்.
