மண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி

சிறப்பாக லண்டனில் நடைபெற்ற கிளி மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் மக்களின் சொல்லணா துயரங்களின்போது தோள்கொடுத்த வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு அவரது அர்ப்பணிப்பான மக்கள் சேவைக்காகவும் கிளிநொச்சி பிரதேச கல்வி வளர்ச்சிக்கு அவர் வழங்கிவரும் பங்களிப்புக்காகவும் 2019ம் ஆண்டுக்கான  “மண்ணின் மைந்தன்” விருதை வழங்கியுள்ளனர்.

லண்டனில் முன்னின்று செயற்படும் பல அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் ,அரசியல் பிரமுகர்கள்,வர்த்தக வள்ளல்கள் , பல பார்வையாளர்கள் என்று அதிகமான மக்கள் கலந்துகொண்ட நிகழ்வாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவர்கள் முன்னிலையில் மிகப்பலமான கரகோசத்தின் மத்தியில் வைத்தியர் அவரகள் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

தொடர்ச்சியான இவரின் சேவைகளுக்கு வாழ்த்துதெரிவித்து பல பிரமுகர்கள் நிதி வழங்கி உத்வேகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About the author

Leave a Reply