சிறப்பாக நடைபெற்ற ஹாட்லியின் மெய்வல்லுனர் போட்டி 2019

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகள் இந்த வருடம் கடந்த சனிக்கிழமை 09ம் திகதி பெப்பிரவரி மாதம் நடைபெற்றது . நிகழ்விற்கு கல்லூரி அதிபர் திரு முகுந்தன் தலைமை தாங்கி நடாத்திய அதேவேளை நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஹாட்லியின் பழைய மாணவரும் ஒய்வு பெற்ற இலங்கை சுங்க வரி திணைக்கள முன்னாள் பணிப்பாளர் திரு.ரவீந்திரகுமார் கலந்து சிறப்பித்திருந்தார்.போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கேடையங்க்களை திருமதி ரவீந்திரகுமார் வழங்கி சிறப்பித்திருந்தார்.

இந்தப்போட்டியில் தாமோதரம் இல்லம் முதலாம் இடத்தை தக்கவைக்க போல் பிள்ளை இல்லம் மற்றும் கணபதிப்பிள்ளை இல்லம் ஆகியன முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை கைப்பற்றின.

இந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகளுக்கு ஹாட்லியின் பல பழைய மாணவர்களும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து சென்று கலந்து சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the author

Leave a Reply