ஐபிசி தமிழின் கைவினை பொருள்களின் யாழ் காட்சியறை திறப்பு

ஐபிசி தமிழின் நீண்ட கால முயற்சியில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாழ்ப்பாணம் நல்லூர்ஆலயம் முன்பாக கைத்தொழில் பேட்டையின் கைவினைப் பொருட்கள் காட்சியகம் மற்றும் விற்பனையகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மண்ணின் பாரம்பரிய விடயங்களை கொண்டவையாகவும் தனித்துவம் வாய்தவையாகவும் அமைந்த கைவினைப் பொருள்கள் பல சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக விலையிலும் தரத்திலும் உருவாக்கபட்டுள்ளமை இங்கு முக்கியமானது. விடுமுறைக்காலங்களில் நல்லூர் ஆலய வளாகங்களுக்கு ஆகக்கூடுதலான சுற்றுலா பயணிகள் பயணிக்கும் இடத்தில் இந்த கைவினைப்பொருள்கள் காட்சியகம் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது தொடர்பான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

About the author

Leave a Reply