Tssa uk உதைபந்தாட்டம் – திறந்த போட்டி – சென் பற்றிக்ஸ் அணி சம்பியன்

வெற்றிகரமான நிகழ்வாக நடைபெற்ற தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் TSSA UK பிரமாண்டமாக ஒழுங்கு செய்த உதைபந்தாட்ட திருவிழாவில் திறந்த போட்டியில் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் பழைய மாணவர்கள் அணி வெற்றி வாகை சூடியது. பலவயதுப் பிரிவினராகவும் நடைபெற்ற இந்த போட்டிகளில் திறந்த வயதினருக்கான போட்டியை மிக எதிர்பார்ப்பான போட்டியாக அமைவது வழமை.இதில் இந்த வருடம் சென் பற்றிக்ஸ் அணி தங்கள் வெற்றியை பதிவு செய்தது.

அத்துடன் இந்த வருடம் காலநிலையும் மிகச்சிறப்பாக அமைந்துவிட ஆயிரக்கணக்கான மக்கள் வருகையோடு தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்க உதைபந்தாட்ட விழா மிக கோலாகலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

 

About the author

Leave a Reply