முகமாலையில் சிவபுரவளாகத்திற்கு அடிக்கல்

கிளிநொச்சி முகமாலையில் அன்பே சிவம் அமைப்பால் அமைக்கப்படவுள்ள சிவபுரவளாகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மார்ச் மாதம் 30ம் திகதி கொண்டாடப்பட்டிருக்கிறது.
சுவிஸ் நாட்டின்  சூரிச் நகரத்தில் அமைந்த அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச்சங்கத்தினால் தான் இந்த  அன்பே சிவம் அமைப்பு இயங்குகின்றது. கிளிநொச்சி முகமாலை என்ற பிரதேசத்தை தெரிவு செய்த அன்பேசிவம் அமைப்பினர் அதற்கான செயற்திட்டம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதையும் வெளியிட்டுள்ளார்கள்.  எட்டு ஏக்கர் காணியில் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியில் அதற்கான காணி கொள்வனவு செய்யப்பட்டு அதன் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டுவிழாவிற்கு  பிரதம அதிதியாக வடமாகாண  முதலமைச்சரும் ஆன்மீக துறையில் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்படும் சி.வி.விக்கினேஸ்வரன்அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.   இங்கு அமையவுள்ள இந்த ஆன்மீக சிவபுர வளாகத்தில் அன்பு   இல்லம், பூங்கா, ஆலயம், பூந்தோட்டம் போன்றன இந்த அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the author

Leave a Reply