ஹாட்லியைற்ஸ் (Hartleyiets) அணிக்கும் யாழ் சென்றலைற்ஸ் அணிக்குமிடையிலான 2018 ம் ஆண்டின் நீல அணிகளின் சமர் கிரிக்கெட் போட்டியில் ஹாட்லியைற்ஸ் அணி வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.

கடின இலக்கான 236 ஓட்ட எண்ணிக்கையை சாகித்தியன் சதம் அடித்து நின்று நிலைத்தாடி அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் சென்றலைற்ஸ் அணி முன்வரிசை வீரர்கள் ரஜீவ் – 78, பாலேந்திரா – 28 மற்றும் மதுசன் 28 ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தின்
மூலம் 49 பந்துப் பறிமாற்றங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஹாட்லியைற்ஸ் சார்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் பிரதீப் 3 விக்கெட்டுக்களையும்
நிசாந்தன் 2 விக்கெட்டுக்களையும்
சுழல் பந்து வீச்சாளர் பிரசாத் ஓட்டங்களை மட்டுப்படுத்தியதோடு
1 விக்கெட்டினையும் சாய்த்தனர்.
பின்னர் 235 கடின இலக்குடன்
துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஹாட்லியைற்ஸ் அணி சாகித்யனின் வேக சதத்துடன் 32 பந்துப் பரிமாற்றங்களிலேய
7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.


ஹாட்லியைற்ஸ் சாகித்யன் 75 பந்துகளில் தனித்து ஆட்டமிழக்காமல் பெற்ற 165 ஓட்டங்களை குவித்தார்.
தனது 45 ஆவது பந்தில் சதத்தினை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
