இடிக்கப்படும் ஆலயங்கள் – தடுக்க வேண்டி போராட்டம்

வட பகுதியில் இருக்கும் ஆலயங்கள் இடித்து உடைக்கப்படும் சூழ்நிலையில் அவற்றை தடுத்து நிறுத்தக்கோரிய மக்கள் போராட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை 04-03-2018 அன்று முன்னெடுக்கப்பட இருக்கிறது. அகில இலங்கை இந்து மகா சபையினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் இந்த போராட்டம் நடைபெறவிருக்கிறது. சைவ ஆலயங்களின் பரிபாலன சபைகள் ,தர்மகத்தா சபைகள் இணையும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆதீன முதல்வர்கள் மற்றும் சைவ சமய துறவிகள் அனைவரும் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

நிறைவில் வட மாகாண முதலமைச்சர்,ஜனாதிபதி,பிரதமர், மற்றும் இந்து கலாசார அமைச்சர்கள் செயலாளர்கள் யாவருக்கும் மகஜர் கள் அனுப்பி வைக்கப்படும் என்று சைவ மகா சபை தெரிவித்துள்ளது.

About the author

Leave a Reply