பறந்து கொண்டிருந்த விமானத்தை மறித்து இறக்கி இளம் ஊடகர் கைது. பெலாரஸ் நாட்டு அரசின் அடாவடி.

பெலாரஸ் நாட்டின் வான் பரப்பில்பறந்துகொண்டிருந்த ‘றயன் எயார்’ விமானம் (Ryanair flight) ஒன்றை வானில் வழிமறித்த அந்நாட்டின் விமானப் படை வலுக்கட்டாயமாக அதனை தரையிறக்கி உள்ளது. அந்த விமானத்தில் பயணித்த பெலாரஸ் எதிரணியைச்…

ஜி 7 நாடுகளின் மாநாட்டில் இனிமேல் நிலக்கரிச்சக்தியில் முதலீடுகள் செய்யப்படுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது

நிலக்கரியை எரிப்பதனால் வரும் சக்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சார நிலையங்களுக்கான அரச முதலீடுகளை நிறுத்துவதாக உலகின் ஏழு பணக்கார நாடுகள் முடிவு செய்திருக்கின்றன. அடுத்த பிரிட்டனில் நடக்கவிருக்கும் அந்த நாடுகளின் மாநாட்டுக்கு…

நீண்ட காலத்துக்குப் பிறகு முதல் தடவையாக பிரதமர் மோடியின் ஆதரவு சரிந்து வருகிறது.

இந்தியாவின் அரசியல்வாதிகள் தமது பொறுப்புக்களைச் செய்வதாலல்ல தனிப்பட்ட முறையில் மக்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் பலத்தினாலேயே ஆராதிக்கப்படுகிறார்கள். அதே போலவே இந்துக்களின் பாதுகாவலன், இந்தியாவின் தேச தந்தை, சாதாரண மக்களின் பக்கம் நிற்கும் தலைவன், உலக…

“பதினொரு நாட்கள் போர்” முடிந்ததற்காக காஸா வீதிகளில் கொண்டாடினார்கள் பாலஸ்தீனர்கள்.

வெள்ளியன்று 02.00 இல் இஸ்ராயேல் – ஹமாஸ் இயக்கினருக்கிடையிலான போர்நிறுத்தம் ஆரம்பித்தது. அதையொட்டி காஸாவில் வாழும் மக்கள் வீதிகளுக்கு வந்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துக் கொண்டாடினார்கள். ஈத் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகியிருந்த அவர்களால் போர்…

இஸ்ராயேல் – ஹமாஸ் போர் நிறுத்தப்படவேண்டுமென்று கோர மறுக்கும் ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாடு ஹங்கேரி.

வெவ்வேறு உலக நாடுகள் தத்தம் முயற்சிகளாலும் போர்நிறுத்தத்தை இஸ்ராயேல் – ஹமாஸ் போருக்கிடையே கோரி வருகின்றன. ஏற்கனவே 200 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துவிட்ட நிலையில் ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையும் மூன்று தடவைகள் கூடி…

பால்டிக் நாடுகள் முதல் தடவையாக தமது மின்சாரத்துக்கான பொறியை வைத்திருக்கும் ரஷ்யாவிலிருந்து விடுபடப்போகின்றன.

1990 க்குப் பின்னரே சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தங்களைத் தனித்தனி நாடுகளாக பால்டிக் நாடுகள் மூன்றும் பிரகடனப்படுத்திக்கொண்டன. ஆனாலும், அவர்களுடைய மின்சாரப் பகிர்தல் தொடர்ந்தும் ரஷ்யாவுடைய மின்சார வரையமைப்புடன் தான் சேர்ந்திருக்கிறது. லித்தவேனியா,…

குவாந்தனாமோ சிறைமுகாமில் 16 வருடங்களிருந்த வயதான கைதி விடுவிக்கப்படுகிறார்.

தீவிரவாதக் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று கைது செய்யப்பட்டு ஒழுங்கான நீதிமன்ற விசாரணைகளின்றி அமெரிக்காவின் குவாந்தனாமோ விசாரணை முகாமிலிருந்த 73 வயதான கைதியை விடுவிக்க சிறைச்சாலை விசாரணைக் குழு முடிவுசெய்திருக்கிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஷைபுல்லா…

லொட் நகரில் எரிக்கப்பட்ட சினகூகுக்கு விஜயம் செய்த இஸ்ராயேலின் அராபியக் கட்சித் தலைவர் பதவி விலகக் கோரிக்கை.

காஸா – இஸ்ராயேல் போர்ச் சமயத்தில் இஸ்ராயேலுக்குள் எழுந்த யூத – அராபியக் கலவரங்களில் இரு பகுதியினரும் எதிர்ப்பகுதியினருக்குப் பல சேதங்களை உண்டாக்கினார்கள். யூத – அராபியக் கைகலப்புக்கள், வன்முறைகள் என்றுமில்லாத அளவுக்கு…

கொரோனாத் தொற்றுக்கள் நுழையாமலிருக்கக் எல்லைகளை மேலும் இழுத்து மூடியதால் வட கொரியாவின் நிலைமை முன்னரைவிட மோசமாகியிருக்கிறது

தமது நாட்டுக்குள் கொரோனாக் கிருமிகளின் தாக்கம் துப்பரவாக இல்லையென்று சாதித்துக்கொண்டிருக்கும் வட கொரியா அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தமது எல்லைக்குள் நுழைய முயற்சித்தவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றது. சகலவிதமான ஏற்றுமதி இறக்குமதிகளையும் நிறுத்தியது.   நாட்டுக்குள்ளிருக்கும்…

வட துருவத்து வளங்களில் கண் வைத்தபடி இராஜதந்திரச் சுற்றுப்பயணமொன்றை ஆரம்பிக்கிறார் அந்தனி பிளிங்கன்.

ஜோ பைடன் பதவியேற்றபின் முதல் தடவையாக அமெரிக்க – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்திக்கப்போகுமிடம் ரெய்க்காவிக், ஐஸ்லாந்து. 20 ம் திகதி நடக்கவிருக்கும் ஆர்டிக் கவுன்சில் மாநாட்டில் ரஷ்ய வெளிவிவகார…