நைஜீரிய நகரமொன்றின் பெண்கள்பாடசாலையிலிருந்து மாணவிகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

சுமார் ஒரு வாரத்தின் பின்பு மீண்டுமொரு நைஜீரியப் பாடசாலையில் ஆயுதத் தாக்குதல் நடத்திய குண்டர்கள் பிள்ளைகளைக் கடத்திச் சென்றிருப்பதாகத் தெரிகிறது. ஜனபே என்ற நகரின் சிறுமியர் பாடசாலையில் நள்ளிரவில் நடந்த இந்தக் கடத்தலில் எத்தனை சிறுமியர் கடத்தப்பட்டிருக்கின்றனர் என்பது இன்னும் தெரியவில்லை.  

https://vetrinadai.com/news/school-children-nigeria/

கடந்த வாரம் கடத்தப்பட்ட 27 மாணவர்கள் உட்பட்ட 47 பேர் இதுவரை என்னானார்கள் என்பது தெரியாத நிலையில் இந்தக் கடத்தல் சம்பவம் நடந்திருக்கிறது. பொலீஸாரும், இராணுவத்தினரும் தாக்கப்பட்ட பாடசாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வலைவீசித் தேடுவதாக மட்டுமே அறிவிக்கப்படுகிறது.

கடைசியாக வெளிவந்த செய்திகளின்படி 317 மாணவிகள் கடத்தப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

About the author

Leave a Reply