பாடசாலை மாணவியைக் கற்பழித்த அதிபருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாட்னா, இந்தியாவில் தமது பாடசாலையில் படிக்கும் 5 ம் வகுப்புச் சிறுமியைக் கற்பழித்த குற்றத்துக்காக அப்பாடசாலை ஆசிரியரொருவருக்கும், அதிபருக்கும் முறையே மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி. இக்குற்றம் 2018 இல் நடந்தது.

குறிப்பிட்ட தண்டனைகள் தவிர அதிபருக்கு ஒரு லட்சமும், ஆசிரியருக்கு 50,000 ரூபாயும் தண்டமும் விதிக்கப்பட்டது. 

11 வயதான தங்கள் மகளின் சுகவீனத்தைக் கவனித்த பெற்றோர் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசீலித்தபோது அவள் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. 

அதைத் தொடர்ந்து பெற்றோர் தமது மகளை விசாரித்ததில் வெளிவந்த விடயங்களைக் கொண்டே அதிபரும், ஆசிரியரும் செய்தவைகள் வெளியாகியிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

About the author

Leave a Reply