எமிரேட்ஸில் இஸ்ராயேலின் தூதுவராலயம் திறந்துவைக்கப்பட்டது.

மாஜி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மத்தியகிழக்கு – இஸ்ராயேல் உறவுகளை இணைக்கும் திட்டத்தின்படி நாலு மாதங்களுக்கு முன்பு எமிரேட்ஸ் முதலாவது நாடாக இஸ்ராயேலுடன் தனது நட்பு நாடு உறவுகளை ஆரம்பித்தது. அடுத்த கட்டமாக 24.01 ஞாயிறன்று எமிரேட்ஸுக்கான இஸ்ராயேலின் தூதுவராலயம் அபுதாபியில் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதே தருணத்தில் எமிரேட்ஸ் அரசு தனது தூதுவராலயத்தை தெல் அவிவில் திறப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யும்படி நாட்டின் அரசாங்கம் கேட்டுக்கொண்டதாக டுவிட்டர் மூலம் அறிவிக்கப்பட்டது.

சாள்ஸ் ஜெ. போமன்

About the author

Leave a Reply