பேராசிரியர் சிறீசற்குணராஜா அவர்கள் இனி யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் திரு சிறீசற்குணராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

களனி மற்றும் யாழ் பல்கலைக்கழகங்களுக்கு இருந்த துணைவேந்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்த மாதத்தின் 10 மற்றும் 12ம் திகதிகளில் அந்த அந்த பல்கலைகழகங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் மூவர் பெயர்கள் சிபார்சுசெய்யப்பட்டிருந்தது.

1978ம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் 16 இலக்க சட்டத்தின் பிரகாரம் சிபார்சு செய்யப்பட்டவர்களிலிருந்து ஜனாதிபதியே நிறைவில் ஒருவரது பெயரை இறுதி செய்யப்படவேண்டும் என்ற அடிப்படையில் யாழ் பல்கலைகழகத்திலிருந்து சிபார்சு செய்யப்பட்ட பேராசிரியர்களிலிருந்து பேராசிரியர் சிறீசற்குணராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Professor Srisatkunarajah

About the author

Leave a Reply