கொரோனாத் தொற்றுக்கள் படு வேகமாகப் பரவுவதால் நோர்வேயின் தலை நகரில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன.

கொரோனாத் தொற்றுக்கள் கடந்த வருடத்தில் ஆரம்பித்த காலமுதல் அதிகமாகப் பாதிக்காமல், கடுமையான நகர முடக்கங்களுடன் தப்பியிருந்த நோர்வேயின் தலைநகரில் கடந்த வாரம் வேகமாகத் தொற்றுக்கள் பரவி வருகின்றன. அதனால், ஒஸ்லோ நகரில் பல சேவைகள் முடக்கப்படுகின்றன.

நவம்பர் மாதத்திலிருந்தே ஒஸ்லோ நகரில் சமூகவிலகல்கள் கடுமையாக அனுசரிக்கப்பட்டன. ஆனாலும், பலர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதன் காரணம் வேகமாகப் பரவிவரும் பிரிட்டனில் திரிபடைந்த கொரோனாக் கிருமிகளின் வகையென்று குறிப்பிடப்படுகிறது. சுமார் 50 – 70 % விகிதம் அக்கிருமியே பலரையும் தொற்றியிருக்கிறது.

எனவே ஏற்கனவே அமுலிலிருந்த கடுமையான சமூக விலகல்களுடன் உணவுச் சாலைகளும், தனியார் சேவைகள் பலவும் மூடப்படுகின்றன. மருந்துக் கடைகளும், சாதாரண தேவைகளுக்கான கடைகளுமே திறக்க அனுமதி. இன்றிரவு முதல் இக்கட்டுபாடுகள் ஒஸ்லோவில் அறிமுகமாகின்றன. அத்துடன் நகரின் உயர்தர வகுப்பு மாணவர்களுக்குக் கல்லூரிகளிலேயே கொரோனாத் தொற்றுப் பரிசோதனை நடாத்தப்படவிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

About the author

Leave a Reply