கொவிட் 19 தடுப்பு மருந்து பற்றிய விபரங்கள் களவாடப்பட்டிருக்கின்றன.

ஐரோப்பிய மருத்துவ அதிகாரம் [ European Medicines Agency] இப்போது இரண்டு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் பற்றிய விபரங்களை ஆராய்ந்து வருகிறது, ஐரோப்பிய நாடுகளில் அவைகளைப் பாவிப்புக்கு அனுமதிக்கும் நோக்கத்துடன்.

அவர்களுடைய இணையத் தளங்கள் மீது தொலைத்தொடர்புத் தாக்குதல் நடந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அவ்விரண்டு தடுப்பு மருந்துகளில் ஒன்றான Pfizer/Biontech நிறுவனத்தின் விபரங்கள் களவாடப்பட்டிருப்பதாக EMA அறிவித்திருக்கிறது.     

அவ்விபரங்களை யார், எப்போது களவாடினார்கள் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் அக்களவினால் நடக்கும் ஆராய்வுகள் எவ்விதம் பாதிக்கப்படும் என்றும் தெரியவில்லை என்று அறிவிக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

About the author

Leave a Reply