உலகின் மிகவும் அதிக வாகனங்களை உற்பத்தி செய்யும் வொக்ஸ்வாகன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹேர்பட் டயஸ் 2025 – 2030 வருடத்தினுள் தானே இயங்கும் வாகனங்கள் பரவலாகச் சந்தையில் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
இயந்திரங்களை இயக்கும் கணனித் திறன், செய்ற்கையறிவூட்டப்பட்ட தொழில்நுட்பம் ஆகியவையில் ஏற் படும் முன்னேற்றம் தானியங்கி வாகனங்கள் விற்பனைக்கு வரும் காலத்தைத் துரிதமாக்கிக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். தானாக இயங்கும் வாகனங்கள் தாம் நேரிடும் சிக்கலான சந்தர்ப்பங்களையும் கெட்டிக்காரத்தனமாகக் கையாண்டு தீர்வுகளை நிர்ணயிக்கும் என்று தான் உறுதியாக நம்புவதாகச் சொன்னார்.
சாள்ஸ் ஜெ. போமன்
