மீடூ அலை மோர்கன் ப்ரீமனையும் தாக்குகிறது

பிரபல அமெரிக்க நடிகர் மோர்கன் ப்ரீமன் தங்களுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், தொல்லைகள் கொடுத்ததாகவும் 16 பெண்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்.

2017 ம் ஆண்டு முதல் மீடூ என்ற பெண்கள் குற்றச்சாட்டு அலை ஆரம்பித்தது முதல் பிரபல நடிகர்கள் உட்பட உலகின் அதிகாரத்தில் இருந்த ஆண்கள் பலரும் குற்றஞ்சாட்டப்பட்டுப் பெரும்பான்மையானவர்கள் விலாசம் தெரியாமலே போய்விட்டார்கள்.

தற்போது 80 வயதான மோர்கன் ப்ரீமன் சுமார் 50 வருடங்களாக ஹோலிவூட்டில் கோலோச்சி வருபவர், 2005 இல் ஒரு ஆஸ்கார் பட்டமும் பெற்றவர். அவரும் அவருடைய சினிமா நிறுவனமும் இதுவரை குற்றச்சாட்டுக்கள் பற்றி எந்தவிட பதிலும் தெரிவிக்கவில்லை.

About the author

Leave a Reply