மூன்று மாதங்களுக்குப் பின்னர் முதல் முதலாக வெளியே தலையைக் காட்டிய ஜக் மா!

சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் முதன்மையானவரான ஜக் மா இணையத்தளம் மூலம் ஆசிரியர்கள் சிலருடன் நேரடி உரையாடலில் பங்குபற்றினார். அவருடைய நிறுவனமான அலிபாபாவும், Ant Group Co. ம் அவர் கிராம ஆசிரியர்களை ஒன்றிணைக்கும் மாநாடு ஒன்றின் ஆரம்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

பொதுவாகப் பல மனிதாபிமான நிகழ்வுகள், நன்கொடை நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் ஜக் மா ஒக்டோபர் மாதத்தின் பின்னர் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாதது பற்றிப் பல விதமான கதைகளும் வெளியே பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

https://vetrinadai.com/news/chinese-alibaba-ceo-missing/

பல ஆசிரியர்களுக்குப் பாராட்டுகளும், பொருளாதார உதவிகளும் வழங்கும் அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டிருப்பதை அறிந்து ஒரு சில மாதங்களாகவே பெறுமதியை இழந்து வந்திருந்த அவரது நிறுவனத்தின் பங்குகள் 5 விகிதத்தால் உயர்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சாள்ஸ் ஜெ. போமன்

About the author

Leave a Reply