வியட்னாம் பாடகி ஐரோப்பா வந்து போக கைதானார்

வியட்னாமின் பிரபலமான பாடகி மாய் கொய்(Mai Khoi) ஐரோப்பா வந்து நாடு திரும்பிய உடன் வியட்நாமில் கைதாகியுள்ளார்.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.முக்கியமாக அவரிடம் பல சிடிக்கள் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவிக்கின்றது.குறிப்பாக Mai Khoi வியட்நாமில் மிக முக்கியமாக மக்கள் மத்தியில் மிகப்பிரபல்யம் வாய்ந்த கலைஞர் என்பதும் அரசாங்கத்தை எதிர்ந்து தன் கருத்துகளை பேசுகின்றவர் என்றும் குறிப்பிடப்படுகிறது.இதன் பின்னணியில் பாடகியின் ஐரோப்பிய பயண நிறைவில் இந்த கைது இடம்பெற்றிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒமாவை அவர் சந்தித்த போதும் அவர் தொடர்பாக பல்வேறு கருத்துகள் உலக அளவில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்த வேளையில் அவரின் கைதையும் விசாரணைகளையும் தொடர்ந்து உலக அளவில் பல்வேறு எதிர்ப்பு கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவருகின்றன.

https://www.vetrinadai.com/news/%e0%ae%aa%e0%af%86%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80/

About the author

Leave a Reply