மேற்கு ஐரோப்பாவின் வழியில் அமெரிக்காவும் பிள்ளைகளுக்காகப் பெற்றோருக்கு மாதாமாதம் உதவித்தொகை.

ஆறு முதல் பதினேழு வயதானவர்களுக்காகப் பெற்றோர்களுக்கு மாதாமாதம் 250 டொலர்கள், ஆறு வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்காக மாதாமாதம் 300 டொலர்கள் அமெரிக்க அரசு கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஜூலை 15 ம் திகதி முதல் கொடுக்க…

மூன்றாவதாக மேலுமொரு “உலகில் மிகவும்” என்று அடைமொழியைக் கொள்ளக்கூடிய கட்டடம் டுபாயில்.

போலந்தில் திறந்துவைக்கப்பட்ட உலகின் ஆழமான நீச்சல் குளம் தனது ஸ்தானத்தை சுமார் ஏழு மாதங்கள் தான் தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. அதைவிட ஆழமான ஒரு நீச்சல் குளம் டுபாயில் திறந்துவைக்கப்பட்டது. போலந்தில் டிசம்பர்…

மேலுமொரு எல்லைக்காவல் நிலையம் தலிபான்களின் காலடியிலா?

இம்முறை தலிபான்களின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பது ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான எல்லையிலாகும். ஏற்கனவே தார்ஜிகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், துருக்மேனிஸ்தான் – ஆப்கானிஸ்தான்,  ஈரான் – ஆப்கானிஸ்தான் எல்லைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கும் தலிபான் இயக்கத்தினரின் கொடி…

முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா சிறைத்தண்டனையால் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம், இறப்புகள்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் செய்த ஊழல் குற்றங்கள் பற்றி விசாரிக்கப்பட நீதிமன்றத்துக்குச் செல்ல மறுத்து வருகிறார். அதனால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவரது…

இந்தியாவின் முதலாவது கொவிட் 19 நோயாளி, மீண்டும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

திருச்சூரைச் சேர்ந்த 20 வயதுப் பெண்ணொருவரே இந்தியாவில் முதல் முதலாகக் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர் என்று அறியப்பட்டது. ஜனவரி 2020 இல் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளி என்று அறியப்பட்ட அவர்…

அடையாளம் தெரியாத மிலான் நகரப் பெண்ணொருத்தியின் தோல் பகுதியொன்று கொவிட் 19 இன் மூலம் பற்றிய விபரங்களைக் கொண்டிருக்கிறதா?

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு கொவிட் 19 இன் மூலம் எது போன்ற விபரங்களை அறியும் விசாரணைகளில் ஈடுபட்டிருப்பது தெரிந்ததே. அவர்களின் கவனம் சமீபத்தில் இத்தாலியின் மிலான் நகரிலிருக்கும் தோல் பகுதியொன்றின் மீது…

பிரான்ஸில் உணவக ஊழியர்கள் தடுப்பூசி ஏற்றவேண்டிய கட்டாய நிலை!

பிரான்ஸில் ஓகஸ்ட் மாதம் முதல் உணவகங்களில் சுகாதாரப் பாஸ் கட்டாயமாக்கப்படவுள்ளதால் அங்கு பணிபுரிகின்ற ஊழியர்கள் தடுப்பூசி ஏற்ற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. பாரிஸின் பெரும்பாலான உணவகங்ளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பணிபுரிவதால் அவர்கள் ஓகஸ்ட்…

ஈராக்கில் மீண்டுமொரு கொவிட் 19 மருத்துவ மனையில் தீவிபத்து, இம்முறை நஸ்ஸிரியாவில்.

ஈராக்கின் நஸ்ஸிரியா நகரின் கொவிட் 19 நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்துவரும் மருத்துவசாலையில் ஏற்பட்ட தீவிபத்தொன்றில் இதுவரை சுமார் 92 பேர் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. அவர்களைத் தவிர மேலும் பலரும் காணாமல் போய்விட்டதாக அங்கே…

பிரிட்டன், சுவீடன் நாடுகளில் கொரோனாக் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்படுகின்றன.

ஜூலை 19 முதல் நாட்டின் கொரோனாக் கட்டுப்பாடுகளை அகற்றிவிடுவதென்று அறுதியாகத் தீர்மானிக்கப்பட்டுப் பிரிட்டனில் அறிவிக்கப்பட்டது. ஒரு பகுதி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், சேவையாளர்கள் செய்துவரும் கடுமையான விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு அத்தீர்மானத்தை போரிஸ் ஜோன்சன் அறிவித்தார்….

மக்ரோனின் உரையால் அன்றிரவே 9 லட்சம் பேர் ஊசிக்கு விண்ணப்பம்! அதிகமாக இளவயதினரே மும்முரம்.

பிரான்ஸில் உணவகம், சினிமா போன்ற பல பொது இடங்களுக்குள் நுழைவதற்குசுகாதாரப் பாஸ் கட்டாயம் என்று அரசுத்தலைவர் அறிவித்த கையோடு லட்சக்கணக்கானோர் தடுப்பூசி ஏற்ற முன்வந்திருக்கின்றனர். இதனால் தடுப்பூசி ஏற்றும் இடம், காலம் என்பவற்றை…