பல்கலைக்கழகமாக தரமுயரும் வவுனியா பல்கலைக்கழகம் / முதல் துணைவேந்தராக கலாநிதி த.மங்களேஸ்வரன் பதவியேற்பு

இதுவரைகாலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகமாக இயங்கிவந்த வவுனியா வளாகம் , ஆவணிமாதம் முதலாம் திகதி முதல் இலங்கையின் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படுகிறது.
அதன்படி வவுனியா வளாக முதல்வராக இதுவரை பணியாற்றிய கலாநிதி மங்களேஸ்வரன் அவர்கள் வவுனியா பல்கலைக்கழக முதலாவது துணைவேந்தராக பதவியேற்று வரலாற்றில் இடம்பிடிக்கிறார்.

ஆடிமாதம் 14ம் திகதி 2021ம் ஆண்டு தன் பதவியேற்பை மேற்கொண்ட கலாநிதி மங்களேஸ்வரன் அவர்கள் பல்வேறு சமய தலைவர்களிடமும் ஆசிகளை பெற்றுக்கொண்டார். முன்னதாக வவுனியா பூங்கா வீதியில் இருந்து மேள தாள வரவேற்புடன் வளாக விரிவுரையாளர்கள் அலுவலர்கள் சகிதம் அழைத்துவரப்பட்டு பதிவாளர் முன்னிலையில் பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the author

Leave a Reply