உத்தர்காண்ட் பனிப்பாறைகளால் ஏற்பட்ட அலையால் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் படலம் தொடர்கிறது.

உத்தர்கண்டில் சமோலி பிராந்தியத்தில் ஞாயிறன்று இயற்கையழிவால் உண்டான வெள்ளப்பெருக்கால் இறந்தவர்களின் 28 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சுமார் 170 பேரைக் காணவில்லையென்று குறிப்பிட்டு மீட்பு வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன….

தன்னிடம் வேலை செய்பவர்களின் மனைவிமாருக்கும் சம்பளம் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கும் இந்திய – எமிரேட்ஸ் தொழிலதிபர்.

தன்னிடம் வேலை செய்பவர்களின் பெற்றோருக்கு ஓய்வூதியங்களும், பிள்ளைகளுக்கு கல்வி உதவியும் செய்துவரும் ஏரீஸ் குரூப் நிறுவனங்களின் உரிமையாளர் ஸொகான் ரோய் விரைவில் தொழிலாளிகளின் மனைவியருக்கும் மாதாமாதம் ஒரு தொகையைக் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். ஷார்ஜாவை…

பிரெக்ஸிட் என்ற கத்தரிக்கோலுக்குள்ளே மாட்டிக்கொண்டு தவிக்கும் வட அயர்லாந்து.

பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் தன் தன் வழியில் போக ஆரம்பித்தபின்பு பிரிட்டனுக்கு அருகே இருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாகமாகத் தொடரும் அயர்லாந்து ஒரு பிரத்தியேக நிலைப்பாட்டைப் பெற்றிருக்கிறது. அதன் விளைவாக அந்த நாட்டு…

தடுப்பு மருந்துகளை ஏவுகணைகளாக்கிச் சீனாவின் அயலாரை நோக்கி எய்வதன் மூலம் சீனாவின் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்கிறது இந்தியா.

தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதில் உலகின் முதலிடத்தைப் பெற்ற நாடு என்பதைத் தனக்குச் சாதகமாக்கிப் பெருமளவில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஆசிய நாடுகளுக்கெல்லாம் கொடுத்து வருகிறார் மோடி.  ஆப்கானிஸ்தானுக்குத் தடுப்பு மருந்துகளை அனுப்பியதன்…

மூன்று மரண தண்டனைகளைத் தலா பத்து வருடங்கள் சிறையாக மாற்றித் தண்டனையை அறிவித்திருக்கிறது சவூதி அரேபியா.

தமது சிறு வயதில் குற்றங்கள் செய்து மரண தண்டனைகள் வழங்கப்படுபவர்களின் குற்றங்கள் மாற்றிச் சிறைத் தண்டனையாக்கப்படும் என்று 2020 மார்ச் மாதத்தில் சவூதிய அரசு அறிவித்திருந்ததன் பேரிலேயே மூன்று ஆண் கைதிகளின் மரண…

தான் போட்ட கொவிட் கட்டுப்பாடுகளைத் தானே மீறும் கிரேக்கப் பிரதமர் மீது கடுமையான விமர்சனங்கள்.

கிரீஸ் பிரதமர் கிரியாக்கோஸ் மித்தோதாக்கிஸ் நாட்டில் போடப்பட்டிருக்கும் கொரோனாத் தொற்றுக் கட்டுப்பாடுகளை இரண்டாவது தடவையாக மீறியிருக்கிறார். தனது அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இக்காரியா தீவில் சுமார் 30 – 40 கொண்ட விருந்தொன்றில் கலந்து…

சீனாவின் மேலுமொரு தடுப்பு மருந்து கொவிட் 19 ஐ எதிர்க்கப் பயன்படுகிறது.

சீன நிறுவனமான CanSino Biologics தனது தடுப்பு மருந்து 67.5% கொவிட் 19 க்கு எதிராகச் செயற்படுவதாக அறிவித்திருக்கிறது. சீனாவின் இராணுவம் ஒரு மருந்து ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தடுப்பு மருந்தைக்…

அஇஅதிமுக-விலிருந்து தூக்கியெறியப்பட்ட ஜெயலலிதாவின் அபிமானத்துக்குரிய சசிகலாவின் கோலாகலமான சென்னைப் பிரவேசம்!

தனக்கு விதிக்கப்பட்ட நான்கு வருடச் சிறைத்தண்டனையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். 27 ம் திகதியே அவரது தண்டனைக்காலம் முடிந்துவிட்டாலும் அவர் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியிருந்ததால் பங்களூரிலேயே அதற்காகச் சிகிச்சை எடுத்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்….

அஸ்ரா – செனகாவின் தடுப்பு மருந்துக்குத் தென்னாபிரிக்காவிலும் ஒரு தடைக்கல்.

தென்னாபிரிக்காவில் திரிபடைந்து பரவும் கொவிட் 19 லேசாகத் தொற்றியவருக்கு ஒரு இலேசான பாதுகாப்பையே அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்து கொடுக்கிறது என்று அந்தத் தடுப்பு மருந்துகளைத் தென்னாபிரிக்கத் திரிபடைந்த கொரோனா நோயாளிகள் மீதான…

“வருகிறது மர்ம வைரஸ்” என்றுமுதலில் எச்சரித்த மருத்துவர்! வுஹான் நகர மக்கள் அஞ்சலி

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுகின்றது என்பதை அந்நாடு உறுதி செய்வதற்கு முந்திய சில நாட்களில் இது நடந்தது. 2019 டிசெம்பர் பிற்பகுதி. அந்த மனிதர் சீனாவின் வுஹான் நகர மருத்துவமனையின் கண் சிகிச்சை…