தென்மேற்கு மாவட்டம் ஒன்றில் டெல்ரா தீவிரமாகப் பரவுகிறது.பிரதமர் அங்கு நேரில் விஜயம். June 23, 2021 பிரான்ஸில் நாடளாவிய ரீதியில் வைரஸ் தொற்றுக்கள் குறைந்து வருகின்றன.கடந்த 24 மணிநேரத்தில் புதிய தொற்றாளர்களாக 2ஆயிரத்து 320 பேர் மட்டுமேஅடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் நாட்டின் தென்மேற்கு மாவட்டங்களில் ஒன்றான Landes பகுதியில் மட்டும்…
ஹொங்கொங்கில் சுதந்திரக் குரல்களின் வடிகாலாக இருந்த அப்பிள் டெய்லி பத்திரிகை மயானத்துக்கு அனுப்பப்படுகிறது. June 23, 2021 சுமார் ஒரு வருடமாகப் படிப்படியாகத் தனது பிடியை ஹொங்கொங்கில் இறுக்கி வரும் சீனாவின் புதிய அதிரடி நடவடிக்கை அங்கிருந்து வெளிவந்துகொண்டிருந்த மிகப்பெரும் பத்திரிகையைத் தாக்கியிருக்கிறது. கடந்த வாரம் சீனாவின் அதிகாரிகள் அப்பிள் டெய்லி…
நாட்டின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசிகள் பெற்ற பின்னரும் ஏன் சில நாடுகளில் கொரோனாப் பரவல் அதிகமாக இருக்கிறது? June 23, 2021 சீலே, ஷிசல்ஸ், பஹ்ரேய்ன், மங்கோலியா ஆகிய நாடுகளில் சமீப வாரத்தில் கொவிட் 19 தொற்றுக்கள் அதிகமாகியிருக்கின்றன. கொரோனாத்தொற்றுப் புள்ளிவிபரங்களின்படி மேற்கண்ட நான்கு நாடுகளும் உலகில் தொற்றுக்கள் மிக அதிகமான 10 நாடுகளின் பட்டியலில்…
திருமணம் செய்துகொண்ட ஜப்பானியர்களுக்கு வெவ்வேறு குடும்பப் பெயர்களை வைத்துக்கொள்ள உரிமையில்லை. June 23, 2021 ஜப்பானைச் சேர்ந்த மூன்று தம்பதிகள் தாம் திருமணம் செய்துகொண்ட பிறகும் தமது முன்னாள் குடும்பப் பெயரையே வைத்திருக்க அனுமதி கேட்டு நீதிமன்றம் போயிருந்தார்கள். ஜப்பானியச் சட்டப்படி கல்யாணம் செய்துகொண்ட இருவர் ஒரேயொரு குடும்பப்…
விளாசிச், மூட்ரிச், பெரிசிச் மூவரும் சேர்ந்து நிலை குலைந்திருந்த கிரவேசிய அணியை அடுத்த மட்டத்தில் சேர்த்தார்கள். June 23, 2021 ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் செவ்வாயன்று நடந்த மோதல்களில் D குழுவின் நான்கு அணிகள் பங்குபற்றின. ஏற்கனவே அடுத்த மட்டத்துக்குத் தயாராகியிருந்த இங்கிலாந்தும், செக் குடியரசும் மோதியதில் 1 – 0 என்று முடிவடைந்தது….
மின்கல வாகன விற்பனையின் வேகத்தைத் தொடர்ந்து ஐரோப்பாவில் அந்த மின்கலத் தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள் அதிகரிக்கின்றன. June 23, 2021 சுமார் 49 பில்லியன் டொலர் செலவில் 38 மிகப் பெரிய வாகன மின்கலத் தொழிற்சாலைகள் ஐரோப்பாவில் கட்டப்பட்டு வருகின்றன. 2029 – 2030 ஆண்டளவில் சுமார் 17 மில்லியன் மின்சார வாகனங்களுக்கான மின்கலங்களை…
மியூனிச் அரங்கத்தில் நாளைய ஜேர்மனி – ஹங்கேரி மோதலின்போது அரங்கை வானவில் நிறங்களில் ஒளிரவைக்கத் தடை. June 22, 2021 ஹங்கேரியப் பாராளுமன்றத்தில் சமீபத்தில் ஓரினச் சேர்க்கை – வெறுப்புணர்வை ஊட்டும் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்புக் காட்டுமுகமாக நாளை ஜேர்மனியின் மியூனிச் நகரில் நடக்கவிருக்கும் உதைபந்தாட்டப் போட்டியின்போது அந்த அரங்கை வானவில் நிறங்களால்…
மிகப் பெரிய இலக்கத்தைக் கொண்ட குடும்பத்துக்குச் சான்றிதழும் ஒரு லட்சம் பரிசும் அறிவித்திருக்கும் மிஸோராம் அமைச்சர். June 22, 2021 தனது மாநிலத்தின் சனத்தொகையைக் குறைப்பதற்காக அசாம் மாநிலம் பெரிய குடும்பங்களுக்குப் பொருளாதார, சமூக முட்டுக்கட்டைகளை விளைவிக்கும் அதே சமயம் சுமார் 21,000 சதுர கி.மீ பரப்பளவுள்ள மாநிலமான மிஸோராம் குறைந்துவரும் சனத்தொகை பற்றிச்…
“எமக்கருகேயுள்ள அராபிய நாடுகளுடன் நல்லுறவை உண்டாக்கிக் கொள்வது எனது முக்கிய நடவடிக்கையாகும்,” இப்ராஹிம் ரைஸி. June 22, 2021 வெள்ளியன்று நடந்த ஈரானிய ஜனாதிபதித் தேர்தல்களின் மூலம் பதவியைக் கைப்பற்றிய இப்ராஹிம் ரைஸி தனது அரசின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய எண்ணத்தை வேகமாக அறிவித்திருக்கிறார். “ஈரான் உலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும். எனது…
முதற் சுற்று வாக்கு முடிவுகளின்படிபாரிஸ் பிராந்தியத்தில் தொடர்ந்தும் வலேரி பெக்ரெஸே முன்னணியில்! June 22, 2021 இரண்டாம் சுற்றில் அவரை வெல்ல இடதுசாரிகள் ஒன்று கூடி வியூகம் எதிர்பார்க்கப்பட்டது போலவே முதற் சுற்று வாக்களிப்பில் பாரிஸ் பிராந்தி யத்தில் வலதுசாரி வேட்பாளர் வலேரிபெக்ரெஸ் (Valérie Pecresse) தலைமையிலான பட்டியலில் இடம்பெறுகின்ற…