பிரேசிலில் ஜனாதிபதியின் கொரோனாத்தொற்று அலட்சியத்துக்கெதிராக மக்கள் பொங்கியெழுகிறார்கள்.

பிரேசிலின் பல பாகங்களிலும் சனியன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி ஜனாதிபதி பொல்சனாரோவுக்குத் தமது அதிருப்தியைத் தெரிவித்தார்கள். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 461,000 பேர் கொவிட் 19 ஆல் மரணமடைந்தும் ஜனாதிபதி தொற்றுகள் பரவாதிருக்கும் நடவடிக்கைகளை…

கிறீஸ்துவின் படப் பதிப்புரிமைக் குற்றத்துக்காக வத்திக்கானை நீதிமன்றத்துக்கிழுக்கிறார் ஒரு வீதி ஓவியர்.

தன்னிடம் சேகரிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான படைப்புக்கள், ஓவியங்கள், சிற்பங்களுக்கெல்லாம் அவையவைக்கான படைப்புரிமைக்காக மில்லியன்களை வருமானமாகப் பெறும் அமைப்பு வத்திக்கான். ஆனால், வீதியில் படைக்கப்பட்டிருந்த ஒரு சாதாரண ஓவியரின் அனுமதியின்றித் திருடி முத்திரைகளாக்கியதற்காக நீதிமன்றத்தின் முன்…

கனடாவில் குடியிருப்புப் பாடசாலை இயங்கிவந்த நிலத்தில் சுமார் 215 பழங்குடிக் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

கனடாவின் பழங்குடியினருக்காக நடாத்தப்பட்ட பாடசாலைகளில் ஒன்று  Kamloops Indian Residential School ஆகும். பழங்குடியினருக்காக ரோமன் கத்தோலிக்க கன்யாஸ்திரிகளால் நடாத்தப்பட்ட, கனடாவிலேயே மிகப்பெரிய குடியிருப்புப் பாடசாலை என்றறியப்பட்ட பாடசாலை இருந்த இடத்திலேயே குறிப்பிட்ட…

அமெரிக்கப் பாராளுமன்ற கீழ்ச்சபையில் பச்சைக்கொடி பெற்ற தீர்மானத்துக்கு செனட் சபையில் சிகப்பு விளக்கைக் காட்டினார் டிரம்ப்.

பதவிகளுக்கு வெளியே இருந்துகொண்டே மீண்டுமொருமுறை அமெரிக்காவின் ரிபப்ளிகன் கட்சியைத் தனது எண்ணத்துக்கு இயக்கி வென்றிருக்கிறார் டிரம்ப். ஜனவரியில் அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பல் பற்றிய இரண்டு கட்சி ஆராய்வு…

சிறீலங்காவின் மேற்குப் பாகத்திலிருக்கும் வெண்மணலிலான கடற்கரைகள் எரிந்த கொள்கலன் கப்பலொன்றினால் கறுப்பாகி வருகின்றன.

இந்தியாவிலிருந்து எரிநெய், டீசல் மற்றும் நைட்ரஜன் போன்ற ஆபத்தான இரசாயணப் பொருட்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப் புறப்பட்ட கப்பலொன்று கொழும்புக்கு வெளியே தீப்பிடித்து எரிந்து வருகிறது. கொள்கலன்களிலிருந்த இரசாயணங்களால் ஏற்பட்ட விபத்தால் ஒரு…

றுவாண்டா இனப் படுகொலையை தடுக்க தவறியதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அதிபர் மக்ரோன்.

மன்னிப்புக் கோரும் சாரப்பட உரை பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோன் றுவாண்டாவுக்கு விஜயம் செய்துள்ளார். கடந்த இருபது வருட காலத்தில் அங்கு சென்றுள்ள முதலாவது பிரெஞ்சுத் தலைவர் அவரே ஆவார். தலைநகர் கிகாலியில்…

நமீபியா படுகொலைகளை “இனப்படுகொலை” என்று ஒப்புக்கொண்டது ஜேர்மனி.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு குடியேற்ற நாடான நமீபியாவில்(Namibia) ஜேர்மனிய பேரரசினால் நடத்தப்பட்ட இனஅழிப்புச் செயல்களை “இனப்படுகொலை” (Genocide) என்று அந்நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. நமீபிய அரசுடன் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் அங்கு இனப்படுகொலையுண்ட…

ஹைட்ரஜன் எரிசக்தி மூலம் ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்.

ஹைட்ரஜன் எரிசக்திப் பாவனையை அறிமுகப்படுத்தும் வகையிலும் அதுஎதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகின்றதாக்கங்களை எடுத்துக் காட்டுமுகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி பாரிஸில் நடைபெற்று வருகிறது. ஈபிள் கோபுரம் அமைந்திருக்கின்ற Champ-de-Mars பகுதியில் இடம்பெற்று வருகின்ற அந்தக்…

புதியதொரு கொரோனாத் திரிபு வியட்நாமில் முதல் தடவையாகக் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

வியட்நாம் மருத்துவசாலையொன்றில், சமீபத்தில் புதிய திரிபடைந்த கொரோனாக் கிருமி ரகமொன்றை அடையாளங் கண்டிருப்பதாக நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் நுகியன் தனா லோங் தெரிவித்திருக்கிறார். அது இந்திய, பிரிட்டிஷ் திரிபுகளிரண்டையும் ஒன்றிணைத்து உருவாகியிருப்பதாக…

கட்டுப்பாட்டு நீக்கங்கள் காரணமாக தீவிரம் குறைந்த நான்காவது அலை சாத்தியம், என நிபுணர்கள் கணிப்பு.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் பல நீக்கப்பட்டு ஓரளவு இயல்பு நிலை திரும்புகிறது.மருத்துவமனைகளின் நெருக்கடி நாளாந்தம் குறைந்து வருகிறது. தடுப்பூசி ஏற்றுவது தீவிரமாக இடம்பெறுகிறது. கோடை விடுமுறைப் பயணங்களைத் திட்டமிடுவதற்காகப் பலரும் தடுப்பூசி…